எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் தொ.மு.ச.கொடியேற்றி பெயர் பலகை திறப்பு
பெரம்பலூர் எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் தொ.மு.ச.கொடியேற்றி பெயர் பலகையை ஆ. ராசா எம்.பி. திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.ஆர்.எஃப். தனியார் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொ.மு.ச.கொடியேற்றி, புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் புதிய கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க தலைவர் எம்.ராஜகாந்தம், எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி வரவேற்புரையாற்றினார்கள்.
ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும் -ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சோமு.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி.கலந்து கொண்டு தொ.மு.ச. கொடியேற்றி, புதிய கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட கழக செயலாளரும் -மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.ராஜ்குமார், பொறியாளர் ப.பரமேஷ்குமார், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.அண்ணாதுரை, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், நாரணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்பத்மாவதிசந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா.அருண், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் துணை செயலாளர் மு.சி.செல்வராஜ், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் துணை தலைவர் எம்.குள்ளபெத்தான், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பொருளாளர் பி.வேணுகோபால் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய,நகர,பேரூர் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க துணை தலைவர் டி.செல்லத்துரை, செயலாளர் வி.கார்த்திக், இணைச்செயலாளர்கள் ஆர்.கணேசன், எஸ்.ஜான்பிரிட்டோ, பொருளாளர் பி.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எம்.முத்தமிழ்செல்வன் நன்றியுரையாற்றினார்.