பெரம்பலூர் அருகே மீன் வலையில் சிக்கிய மலை பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

ரஞ்சன்குடி கோட்டையில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு. உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.;

Update: 2021-10-28 11:03 GMT

ரஞ்சன்குடி கோட்டையில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.

பெரம்பலூர் அருகே ரஞ்சன்குடி கோட்டையில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு. உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடி, முருக்கன்குடி, வெண்பாவூர், சித்தளி, உள்ளிட்ட பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கோட்டையானது வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக விளங்கி வருகிறது. இப்பகுதியின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. 

இந்நிலையில் ரஞ்சன்குடி கோட்டைக்கு பின்புறம் உள்ள தடுப்பணை மதகில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உள்ளதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்த்தபோது அங்குள்ள மதகில் தண்ணீரில் மீன் வலையில் சிக்கிக் கொன்டு வெளியே போக முடியாமல், போராடிக்கொண்டிருந்த மலைபாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டு அதனை அயன்பேரையூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

மேலும் கொரோனோ தொற்று காரணமாக, கோட்டைக்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லாத நேரத்தில் பராமரிப்பு இன்றி இருந்து வந்துள்ள நிலையில், தற்பொழுது வனவிலங்குகள் இங்கே வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோட்டையை சுற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பாதுகாக்க வேண்டுமென பார்வையாளர் நலன்கருதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News