பெரம்பலூர் செட்டிகுளம் லயன்ஸ் சங்கத்தில் மாதாந்திரக் கூட்டம்
செட்டிகுளம் வள்ளலார் குருகுலத்தில் லயன்ஸ் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் வள்ளலார் குருகுலத்தில் லயன்ஸ் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.
சாசனத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். ரத்ததானம் முகாம், பொது மருத்துவம், கரோனா விழிப்புணர்வு நடத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான இன்பச் சுற்றுலா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் செட்டிகுளம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக லயன்ஸ் சங்க பொருளாளர் அன்பழகன் வரவேற்றார். இறுதியில் லயன்ஸ் சங்க செயலாளர் விஜய்அரவிந்த் நன்றி தெரிவித்தார்.