பெரம்பலூரில் எம்.எல்.ஏ. நடவடிக்கையால் குப்பைகள் உடனடியாக அகற்றம்
பெரம்பலூரில் எம்.எல்.ஏ. பிரபாகரன் நடவடிக்கையால் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட நகரப்பகுதியில் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்திருப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதனால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களுக்குத் துர்நாற்றத்துடன் காற்று வீசுவதால் பல்வேறு தொற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை சந்தித்து தங்கள் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரி பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று துறைமங்கலம் 10வது வார்டு பள்ளிவாசல் தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை உடனே ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அப்பகுதியில் இருக்கும் குப்பையை உடனே அகற்றப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.