பெரம்பலூரில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூரில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.;
தமிழகம் முழுவதும் இன்றுகுடும்ப அட்டை தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதனிடையே பெரம்பலூர் தேரடி தெருவில் நியாய விலைக்கடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,88,096 மற்றும் 74 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.