உள்ளாட்சிதேர்தல்: கூட்டணிகட்சியினருக்கு வார்டுகள் ஒதுக்கீடுகுறித்து திமுக ஆலோசனை

நகர்ப்புற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது

Update: 2022-01-29 13:00 GMT

 ஆலோசனைக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்தறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடந்தது

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கட்சியினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி,டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினரகள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன்,மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சி.ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்ள் ஆர்.ரவிச்சந்திரன்,பி.சேகர், எம்.வெங்கடேசன், ஏ.எம்.ஜாகிர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அகில இந்திய காங்கிரஸ், ம.தி.மு.க. இ.கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட்.கம்யூனிஸட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News