பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 125 வேட்புமனுக்களில் 13 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 112 நபர்கள் களத்தில் உள்ளனர்.;
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 125 வேட்புமனுக்களில் 13 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 112 நபர்கள் களத்தில் உள்ளனர். லப்பைகுடிகாடு பேரூராட்சியில் 97 வேட்புமனுக்களில் 17 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 80 நபர்கள் களத்தில் உள்ளனர்.
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம் 54 வேட்புமனுக்களில் 3 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 51 நபர்கள் களத்தில் உள்ளனர். பூலாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 36 வேட்புமனுக்களில் 3 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 6வது வார்டு மாணிக்கம் த/பெ பூமாலை (திமுக) 11வது வார்டு, பூங்கொடி க/பெபெரியசாமி (திமுக) ஆகியோர் அன்னப்போஸ்ட்டில் வெற்றி பெற்றுள்ளனர். 31நபர்கள் களத்தில் உள்ளனர்.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 48 வேட்புமனுக்களில் 3 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 45 நபர்கள் களத்தில் உள்ளனர்.