பெரம்பலூர் அருகே சாராயம் விற்பனை செய்தவர் இருசக்கர வாகனத்துடன் கைது
பெரம்பலூர் அருகே கள்ளசாராயம் விற்பனை செய்தவரை போலீசார் இருசக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.;
பெரம்பலூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தாக கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் போலீசாருடன் உள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச் சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கள்ளப்பட்டி பஞ்சாயத்து கிணறு அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த காட்டுக்கொட்டகையை சேர்ந்த ராமகிருஷ்ணன்,என்பவரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தனர். அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 7 லிட்டர் மதிப்பிலான சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.