பெரம்பலூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஏழை விவசாயிக்கு பசுங்கன்று
பெரம்பலூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஏழை விவசாயிக்கு பசுங்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ,வரகுபாடி கிராமத்தில் வசித்து வரும் மிகவும் ஏழை நபரான குமரவேல் என்பவருக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் வரகுபாடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் முன்னிலையில் பெரம்பலூர்" ஸ்ரீ கோகுலம் ஜுவல்ஸ்" உரிமையாளர் மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்க தலைவருமான குணசீலன் , அங்குராஜலட்சுமி ஆகியோர் ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள பசுங்கன்று ஒன்றினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை கௌரவ செயலாளர் ஜெயராமன், வரகுபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலாசெல்வம், பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், மற்றும் உலகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.