மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: பெரம்பலூர் திமுகவினர் அனுசரிப்பு
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் முன்னிலையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், து.ஹரிபாஸ்கர், சன்.சம்பத், மகாதேவி ஜெயபால், பி.பிச்சைப்பிள்ளை, வேப்பந்நட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ்,மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், தமிழ்.கருணாநிதி,எம். மணிவாசகம், மாது(எ)மருதமணி, அஜித்(எ)அஜய் ரோஹித், நல்லுசாமி, சபரீஸ், ரா.சிவா, கே.ஜி.பார்த்திபன், நடத்துனர் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.