15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி- கிராம மக்கள் மலர் தூவி வரவேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி நீரை கிராம மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீர் போக்கிவழியாக நீர் வழிந்தோடுகிறது.சில ஏரிகள் பத்தாண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது.அதன் படி பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி பெரிய ஏரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நவம்பர் 29-ஆம் தேதியான இன்று ஏரி முழுவதுமாக நிரம்பி விட்டது.
இதனால் வரத்துநீர் உபரி நீர் போக்கிவழியாக வெளியேறி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி வழிவதை கொண்டாடும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் உற்சாகத்துடன் மேளதாளத்துடன், வெடி வெடித்து, நடனமாடியவாரே ஊர்வலமாக ஏரிக்குச் சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மகிழ்ந்தனர்.பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.