பனை விதை சேகரிப்பு பணியில் தொண்டு நிறுவனம்
பனை விதை சேகரிப்பு பணியில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் பனை விதை சேகரிக்செகும்ட்டி பணி நடைபெற்றது.இந்த பணியானது செட்டிகுளம், மாவிலிங்கை, பெரகம்பி ஆகிய கிராமத்தின் காட்டுப்பகுதிகளில் வளர்ந்து பயன் தரும் பனை மரத்தின் கீழ் விழுந்து கிடந்த பனை விதை சேகரித்தனர்.
பனை மரம் பூமிக்கடியில் நீரினை சேமிக்கும் தன்மை கொண்டதாகும். இதை நன்கு அறிந்த இக்குழுவினர் பலர் ஒன்று சேர்ந்து பனை மரங்கள் வளர்ந்து காணப்படும் பகுதிகளுக்கு சென்று பனை மரத்தின் கீழ் விழுந்துள்ள சுமார் 200க்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.
சேகரித்த இந்த விதைகள் அனைத்தையும் வரும் கோடை மழைக்கு ஏரியை சுற்றி நடுவதற்காக பனை விதைகளை பதப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.