2.94 லட்சம் பணம் பறிமுதல்
ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.94 லட்சம் பணம் பறிமுதல்.;
பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் காவல் நிலையம் அருகே உரிய ஆவணங்ககள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரொக்க பணம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்தை வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, குன்னம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.