குன்னத்தில் உ. வே. சாமிநாதர் ஐயருக்கு நினைவிடம் அமைக்கக் கோரிக்கை
குன்னத்தில் உ.வே.சாமிநாத ஐயருக்கு நினைவிடம் அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
அகழ் - திங்கள் இதழ், பெரம்பலூரின் சிறப்புகள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. பெரம்பலூரின் விவசாயம், சிற்பக்கலை, நீர் வளம் பற்றிய கட்டுரைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்து செய்து சிறப்பான தொகுப்பை வழங்கி வருகின்றன. அவ்வாறான பயணத்தில் பெரம்பலூரில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளை எழுத கள ஆய்வு செய்தனர்.
உ. வே. சா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட சென்ற போது, பின்பக்க இடிந்த சுவரும், முன்பக்க வாசலும், இடையில் பல செடிகளும், மரங்களும் முளைத்து, அங்கு ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
அதனால் குன்னத்தில் வள்ளலார் இலவச பயிற்சி மையத்தை துவக்கி வைக்க வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அவர்களிடம் உ. வே. சா அவர்களுக்கு ஒரு நினைவிடத்தை ஏற்ப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அகழ் - திங்களிதழ் நிறுவனர் மற்றும் ஆசிரியர் செ. வினோதினி பொதுநல மனு கொடுத்தார்.