பெரம்பலூர்- நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உடலுக்கு சீமான் அஞ்சலி
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தினார்
நாம்தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.அவரது உடல் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதணை முடித்து சொந்த ஊரான வேப்பூர் அருகே உள்ள கொட்டாங்காடு கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள் சீமான் நேரடியாக அங்கு வந்து அருள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அருள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி ராமசந்திரன் ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அருள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அருள் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது மாரடைப்பு போன்ற இயற்கை காரணங்களால் உயிரிழந்தாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.