கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை
குன்னம் அருகே இரண்டு மணி நேரம் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காருகுடி கிராமத்தில் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் செல்லியம்மன் கோயில் அருகே மாணிக்கம் என்பவரின் வயலில் உள்ள கிணற்றில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மகேந்திரன் என்பவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக அங்கே இருந்த கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது சுமார் இரண்டு மணி நேரம் நீரில் தத்தளித்து வந்த பசுமாட்டை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து உடனே மாட்டை மீட்க போரடி வந்தனர்.
இந்நிலையில் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயைணப்பு துறையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின்படி, பொறுப்பு தீயணைப்பு துறையினர் தலைவர் கரிகாலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து வந்த பசு மாட்டை மீட்டனர்.
இந்தமீட்பு பணியில், தீயணைப்புத்துறையினர் சக்திவேல், ராஜா, ஆகியோர் உடனிருந்தனர் மீட்கப்பட்ட பசு இன்னும் ஓரிரு மாதங்களில் இளம் பசு ஈன்றெடுக்கப் போவது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.