பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் போலீசார் தீவர வாகன தணிக்கைகள்செய்தனர். பேருந்து நிலையம் அருகே மங்களமேடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு பணியில் கொரோனா ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் தேவையின்றி பயணம் செய்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படடது.. மேலும் இந்த கண்காணிப்பு பணியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.