பெரம்பலூர் அருகே பொன்னேரு உழவு நடைபெற்றது

Update: 2021-04-25 16:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் இன்று பொன்னேரு நிகழ்ச்சி நடைபெற்றது. உழவர்கள் சித்திரையில் சூரிய பகவான், வருண பகவானையும் வணங்கி விவசாயம் செழிக்கவும் பருவம் தவறாது மழை பொழியவும் சித்திரை மாதத்தில் உழவுத் தொழிலை ஆரம்பிக்கும் பணி நடைபெறும்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்நிகழ்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு இந்நிகழ்சியை மறந்து விட கூடாது என்பதற்காகவும் விவசாயத்தில் தற்போதைய தலைமுறை ஆர்வம் காட்ட வேண்டுமென கொட்டரை போன்ற ஒரு சில கிராமங்களில் நடைபெறும் இந்த பொன்னேரு உழவினால் பெரம்பலூரில் இந்நிகழ்சி இன்றளவிலுல் உயிரோட்டம் பெற்றுள்ளது. இந்த நிகழ்சியில் ஊர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொன்னேரு உழவை கண்டு களித்தனர்.

Tags:    

Similar News