ஸ்டாலினுக்கு முதல்வர் ராசி இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரூடம்
குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
குன்னத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் சிறப்புகளை கூறினார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், ஸ்டாலினுக்கும் முதல்வர் பதவிக்கும் ராசி இல்லை என விமர்சித்ததோடு, அதிமுகவின் கூட்டணியே தமிழகத்தின் பலமான வெற்றிக் கூட்டணி எனவே, இம்முறை தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறும் அதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து பெரம்பலூர் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.