ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற 7 ஆண்டுகளாக போராடும் 70 வயது மூதாட்டி
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி ஏரி வரைபடத்துடன், கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி நல்லம்மாள் ஏரி வரைபடத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நல்லம்மாள் என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார்.
அதில், "நன்னை கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கண் துடைப்பாக சில ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டுச் சென்றனர்.
எனவே ஆட்சியர் நேரில் வந்து ஏரியைப் பார்வையிட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.