சிறுமியை கடத்திய கள்ளக்குறிச்சி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
பெரம்பலூர் மாவட்ட சிறுமியை கடத்திய கள்ளக்குறிச்சி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கள்ளக்குறிச்சியில் உறவினர் வீட்டிற்கு சென்ற போது அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த சிறுமியை வாலிகண்டபுரத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்திச் சென்றுள்ளார் .
இதுகுறித்து சிறுமியின் தாய் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலக்ஷ்மி வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தையும் சிறுமியையும் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மங்களமேடு காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.