கலா உத்சவ் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
கலா உத்சவ் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.;
கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் நவம்பர் 16,17 மற்றும் 18ஆம் தேதிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் நடைபெற்ற கலாஉத்சவ் போட்டி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி கே.எஸ். அபர்ணா இரண்டாம் பரிசு வென்று பதக்கத்தினை பெற்றார். அவ்வாறு வென்ற பதக்கத்தினை மாணவி கே.எஸ். அபர்ணாவிற்கு மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வாழ்த்து தெரிவித்தார்
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். அறிவழகன், கோல்டன் கேட்ஸ் பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், கோல்டன் கேட்ஸ் பள்ளி முதல்வர் அங்கயற்கண்ணி, உதவி திட்ட அலுவலர் பொ. ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.