திருக்கோயில்களில் உழவாரப் பணி: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தீர்மானம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின், பெரம்பலூர் மாவட்ட யூனியன் துவக்க விழா மற்றும் முதல் பொதுக்குழு நடைபெற்றது
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின், பெரம்பலூர் மாவட்ட யூனியன் துவக்க விழா நிகழ்ச்சி மற்றும் மாவட்டத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் (அக்- 17 ) இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அஸ்வின் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் விஸ்வநாதன், மாநிலச் செயலாளர் ஐயப்பன், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதர், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மாவட்ட யூனியனை துவங்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.
இதில், திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளுதல், அன்னதானம் அளித்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், பிரசித்தி பெற்ற கோவில்களில் உண்டியல் பணம் எண்ணுவது, கூட்ட நெரிசலை சீர்படுத்துவது, ஏழை எளிய குழந்தைகள் பள்ளி படிப்புக்கு உதவுதல், ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் சேவையாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் தொழிலதிபர்கள் வள்ளலார் குமுமம் அரவிந்தன், அஸ்வின் குழுமத்தின் கணேசன், ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் விவேகானந்தன்,வழக்கறிஞர் வாசுதேவன், பேராசிரியர் தமிழ்மாறன், விசுவகர்மா கைவினைஞர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சேவா சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், முக்கியபிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.