பெரம்பலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.ஜே.கே.கட்சி நிவாரண உதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.ஜே.கே.கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.;

Update: 2021-11-28 13:07 GMT

குரும்பலூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் மழையினால் வீடு இடிந்து பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் தொடர் மழை காரணமாக மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர்,இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளைய வேந்தர் உத்தரவின்படியும் இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆலோசனை படி நிவாரண உதவி வழங்கப்பட்டது

குரும்பலூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்பு துரை மற்றும் ஐ.ஜே. கே ஒன்றிய , மாவட்ட பொறுப்பாளர்கள் 20 குடும்பங்களுக்கு தலா 1 சிப்பம் அரிசி, குடம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.இந்த நிகழ்வில் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News