பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவுபடி பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் 6 முதல் 12 வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களுக்கு அறிவிப்பு செய்து விட்டு வகுப்புகளை நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படும் பட்சத்தில் விடுமுறை அளிக்க நேர்ந்தால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வகுப்புகளுக்கோ, பள்ளிகளுக்கோ விடுமுறை அளிக்கலாம். என்று பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.