பெரம்பலூர் பகுதியில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.;

Update: 2022-01-23 13:19 GMT

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது.

பெரம்பலூர்  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பெரம்பலூர் நகரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் மலைப்பிரதேசங்களை போன்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

இந்த கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர். மேலும் பெரம்பலூரை ஒட்டிய திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிக பனிமூட்டம் நிலவியதை தொடர்ந்து வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.

Tags:    

Similar News