பெரம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி தமிழ் மருத்துவம்
பெரம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி தமிழ் மருத்துவம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் - செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் சித்த மருத்துவமனை சார்பில் மக்களை தேடி தமிழ் மருத்துவம் நிகழ்வு நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று பரவல் குறித்தும்,விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸின் அறிகுறியாக உள்ள மூச்சுத் திணறல் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும் நோய் எதிர்ப்பு தரக்கூடிய கப சுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம்.உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சித்த மருத்துவர் பிரபா,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சூர்யா, துர்கா உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.