சிங்கத்தையே தீர்த்துக் கட்டிய கொரோனா, ஆடு, மாடுகளை விட்டு வைக்குமா, கிராம மக்கள் அச்சம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரு சிங்கம் இறந்தும் உள்ளது. தற்போது கிராம புறங்களில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. அது ஆடு,மாடுகளை விட்டு வைக்குமா என கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-06-05 12:00 GMT

சிங்கமே கொரோனா வந்து அவதியடையும் போது கிராமங்களில் அனைத்து இடங்களிலும் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளுக்கு கொரோனா வருமா, அதனை தடுக்க என்ன வழி என்று தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா இன்றளவிலும் ஓயாமல் பல மனித உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டுள்ளது. இதனிடையே வண்டலூரில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ஒரு சிங்கம் உயிரிழந்தது.

உலக சுகாதார அமைப்பு WHO விலங்குகளுக்கு கொரோனா பரவாது என தெரிவித்து வந்த நிலையில் சிங்கம் கொரோனாவால் உயிரிழந்துள்ள செய்தி வெளியானதை தொடர்ந்து மக்கள் பலரும் பீதியடைந்துள்ளர்.

மேலும் கிராமப்புறங்களில் ஆடு, மாடு கால்நடைகள் வளர்ப்போரும் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்போரும் கொரோனா கால்நடைகளுக்கு பரவுமா இல்லையா என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனாவை தடுக்கவே அரசு சிரமப்பட்டு வரும் நிலையில் கால்நடைகளுக்கு இத்தொற்று பரவுமேயானால் அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அச்சம் ஒருப்புறம் இருக்க

கிராமபுறங்களில் பல குடுப்பங்களின்  வருவாயாக இருந்து வரும் கால்நடைகளை ஒருவேளை கொரோனாவால் இழக்கும் நிலை ஏற்பட்டால் பொருளாதாரம் என்ன ஆகும் என்ற பயமும் எழுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே இது போன்ற அச்சத்தை போக்கும் வகையில் அரசு விரைந்து கால்நடைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறதா? தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கால்நடைக்கு பரவ வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News