கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி
பெரம்பலூர் மாவட்டத்தில் கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பள்ளிசிறார் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் அம்மாப்பாளையம் வட்டார கண் மருந்துவ குழுவினர் , பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தினர் .
இதில் டாக்டர் செந்தில் நாதன் தலைமையில் கலந்து கொண்ட மருத்துவக் குழுவினர் நடத்திய பரிசோதனையின் அடிப்படையில் , கண் கண்ணாடி அணிவதற்கு . பரிந்துரைக்கப்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன .
இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி சவரியம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கண் பயிற்சி ஆசிரியை அமலி , மெர்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .