பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அ. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-02-28 11:07 GMT

பெரம்பலூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டசெயலாளர் ஆர்.டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை தி.மு.க. வின் ஏவல் துறையாக செயல்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டது.மேலும் தி.மு.க. அரசு பொய் வழக்குபோடுவதாக கூறி கோஷம் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News