பெரம்பலூர் அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கியது செருப்பு
பெரம்பலூர் அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கிய செருப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சிக்கு உட்பட்ட லப்பைக்குடிக்காடு மாட்டு பாலம் என்ற இடத்தில் பீர் முகம்மது என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காலணிகளை எடுத்துச் சென்றார். அதனை சோதனை செய்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பேரூராட்சி தேர்தல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணாவிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூபாய் 30,400 என கூறப்படுகிறது.