இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்தியக்குழு பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளையும் பார்வையிட்டு செல்லவேண்டும் என விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
மேலும் பாதிக்கப்பட்டபயிர்களை முறையாக கணக்கெடுத்து சின்னவெங்காயம்,மக்காச்சோளம்,பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வெள்ளநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பிய விவசாயிகள்,இடுபொருள் வழங்காமல் நிவாரணத்தை ரொக்கமாக வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.