இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-20 01:55 GMT

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா   தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் 2021-2022ம் நிதியாண்டிற்கு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவை கணவனால் கைவிடப்பட்டவர் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப் பட  உள்ளது,

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தல் உள்ள விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமானச் சான்று, (ரூ.72,000ஃ-க்குள் இருத்தல் வேண்டும்) இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் ஆறு மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை) சாதி சான்று நகல், ஆதாh; அட்டை நகல், ரெண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருப்பின் அதன் நகல், ஆகியவைகளுடன் மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு 30.06.2021-க்குள் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News