பெரம்பலூரில் வழிதவறி வந்த மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்

பெரம்பலூரில் வழிதவறி வந்த மூதாட்டியை மீட்ட போலீசார் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்து உள்ளனர்.

Update: 2021-12-05 15:50 GMT

பெரம்பலூரில் வழி தவறிய மூதாட்டியை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சோதனைச்சாவடியில் மங்களமேடு கால்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமைக் காவலர் செல்வராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து எண் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் அவரது குழுவினரான தலைமைக் காவலர் சிவக்குமார், முதல்நிலை காவலர் வேல்முருகன், காவலர்  விமலநாதன் ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வழி தெரியாமல் தவறி  வந்த 86 வயதான சுப்புலெட்சுமி என்ற மூதாட்டியை பரிவோடு விசாரித்து அவரின் உறவினரை தொடர்பு கொண்டு மூதாட்டியை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News