பெரம்பலூர் கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் பெரம்பலூர் நகரில் மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைட வைத்து நடத்தி வரும் அதன் உரிமையாளர்களை அழைத்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பாக்கு , புகையிலை போன்ற வகைகளை தங்களது கடைகளில் வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டும், போதை பொருட்கள் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்கும் வகையிலும் போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு சிறப்பு பிரிவானது உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 25 கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.