பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு பொது அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட ஊர்காவல் படைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆக மொத்தம் 11 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 10.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் (ரேணுகா சில்க்ஸ் எதிரில்) விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர்கள் ஆக இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு நிறைவு அடையாதவராகவும் இருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் பெற வரும்போது கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு அசல் மற்றும் இவற்றின் நகல் எடுத்து வர வேண்டும். மேலும் உடற்தகுதி காவல்துறையை போன்றது மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு எடுத்து வர வேண்டும்.
மேலும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். எவ்வித அரசியல் கட்சியில் தொடர்பு இல்லாதவராகவும் இருக்கவேண்டும். இப்பணிக்கு மாதம் ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. பணி நாட்களுக்குரிய தொகுப்பு ஊதியம் மட்டுமே வழங்கப்படும். பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.