வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஏரி, குளங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது;
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி முனியன் குளம் ஏரியில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றும் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதவி இயக்குனர் ஊராட்சிகள் பாரதிதாசன் , வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், ஆலம்பாடி ஊராட்சி தலைவர் கல்பனா சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.