தமிழகத்தில் 'டெங்கு' கட்டுப்பாட்டில் உள்ளது-அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பெரம்பலூரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
பெரம்பலூரில் நடைபெற்ற 6 வது கட்ட கொரோனா சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது,50ஆயிரம் இடங்களில் 6 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றும்60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை செலுத்த வேண்டியுள்ளதால் அவர்களை குறிவைத்தே இன்றைய சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும்இந்திய அளவில்71%முதல் தவணை தடுப்பூசியும்,31%இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்றும்தமிழக அளவில்68% முதல் தவணை தடுப்பூசியும்,26%இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சுகாதார அமைப்புகள் சொல்லியிருப்பது போல் 70% கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என கூறியிருப்பதால் அந்த இலக்கை இன்றைய முகாம் முடிவில் அடைவோம் எனவும்
2 வயதிற்கும் மேற்வட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுனர்கள் மட்டுமே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.மத்திய அரசு அறிவித்தவுடன் தமிழகத்தில் போடப்படும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் 66 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பருவமழை காலங்களில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் டெங்கு 400 என்ற எண்ணிக்கையில் கட்டுப்பாட்டில் இருக்கிறது.முதல்வர் ,மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.