அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-12-10 05:15 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனை.

பருவமழை முடிந்ததும் வழக்கமாக ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், பெரம்பலூர் மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேர் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் விரைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News