பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-15 16:45 GMT

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.

மழை வெள்ள பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.4025 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் அனைத்து காய்கறிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கிட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகளுக்கு நிபந்தனையின்றி இன்சூரன்ஸ் வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். CPI வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ராசேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் கோரிக்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News