பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வடகிழக்கு பருவமழையினால் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது. இதனால் தினமும் காலை, மாலை நேரத்தில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் அந்த தெப்பக்குளத்தில் திடீரென்று சிறிய மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. தெப்பக்குளத்தில் ஆங்காங்கே அதிகமான அளவு மீன்கள் செத்து மிதந்தன. தெப்பக்குளத்தில் செத்து போன மீன்களை அப்பறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பததோடு, மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.