சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூரில் சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-12-19 14:46 GMT

சைபர் கிரைம் தொடர்பாக பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் க.எறையூர் கிராமத்தில் என்.எஸ்.எஸ். முகாம் அமைத்து  தனியார் கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடம்  சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கலா மற்றும் அவரது குழுவினர் இணைந்து இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏ.டி.எ.ம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏ.டி.எம். கார்டு மற்றும்
ஓ.டி.பி.  எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும் எடுத்துக்கூறினார்கள்.

மேலும் வேலை வாங்கி தருவது, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்களில், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்வது குறித்தும், ஆன்லைன் வர்த்தகம் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 155260 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Tags:    

Similar News