பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெரம்பலூர் வள்ளலார் பார்ட்டி ஹாலில் 150 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, மகளிர் சுய உதவி குழுக்கள், மகளிருக்கு 33%இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி பெண்கள் திருமண உதவி திட்டம், கல்வி உதவி திட்டம் என்று கருணாநிதி கொண்டு திட்டங்களாகும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர்களுக்கு சுய உதவி கடன்களை மாவட்டங்கள் தோறும் சென்று மணிக்கணக்கில் நின்று கொண்டு வழங்கினார். தற்போதும் கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஶ்ரீவெங்கட்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் முத்தமிழ்செல்விமதியழகன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சோமு.மதியழகன், மகாதேவி ஜெயபால், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.