விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் மனு
விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் கொரோனோ தொற்று காரணங்களில், நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது பணிகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியதன் பேரில் வீடு கடைகள் மற்றும் அரசு கட்டுமானங்கள்உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, இருந்தபோதிலும் கட்டுமானப் மூலப்பொருள்களின் விலையில் சிமெண்ட் 15 சதவீதமும், கம்பி 18 சதவீதமும், பி.வி.சி. பொருட்கள் 25 சதவீதமும், எலக்ட்ரிக்கல் பொருட்கள் 20 சதவீதமும், செங்கல் 18 சதவீதமும் மேலும் இது போன்ற மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் கணிசமாக 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் கட்டிட உரிமையாளர்களுக்கும் கட்டிட பொறியாளர்களுக்கும் இடையில் அதிகமான பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே கட்டுமான தொழிலை மீட்டெடுக்கும் பொருட்டு இப்பிரச்சினை குறித்த தகவல்களை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் இக் கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடபட்டிருந்தது.
மனு வழங்கப்பட்ட போது சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், சிவகுமார், பாலமுருகன், விஜயபாபு, சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் கோபிநாத், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.