சர்க்கஸ் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு
அரிசி, மளிகை பொருடகள் மற்றும் முககவசம் உள்ளிட்டவைகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் சர்க்கஸ் கலைஞர்களுக்கு வழங்கினார்கள்.
கொரோனா ஊரடங்கு பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்கியது. இதில் சர்க்கஸ் தொழிலாளர்களும் அடங்குவர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சர்க்கஸ் குழுவினர் சர்க்கஸ் நிகழ்வுகளை நடத்தினர்.
இந்நிலையில் போதிய வருமானம் இல்லாத சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினர். உடலை வருத்தி உழைப்பவருர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர்களுக்கு, சர்க்கஸ் குழுவினர்கள் நன்றியினை தெரிவித்தனர்.