செங்குணம் ஊராட்சி 100 நாள் வேலை திட்ட சமூக தணிக்கைக்கான சிறப்பு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி 100 நாள் வேலை திட்ட சமூக தணிக்கைக்கான சிறப்பு கூட்டம் நடந்தது.;
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 2019-2020 ஆம் நிதியாண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம கூட்டம் செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் க.சந்திரா தலைமையில் , பெரம்பலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா முன்னிலையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் ஒன்றிய அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட சமூக தணிக்கை குழுவினர் 2019-2020 ஆம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தணிக்கை குறித்த விவரங்களை விவாதிக்க அதன் பொருட்டு செங்குணம் ஊராட்சி செயலாளர் கோவிந்தன் பதிலளித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற 100 நாள் வேலை திட்ட பணியாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வரும் 2022-2023 நிதியாண்டில் வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனைத்து குடும்பத்திற்கும் 100 வேலை நாட்கள் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
100 நாட்கள் வேலை திட்ட பணியாட்கள் பெருமாள் மலை குட்டை, குடாப்புகளில் தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செங்குணம் பெருமாள் மலை அடிவாரத்தில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் செங்குணம் ஊராட்சி துணைத் தலைவர் மணிவேல் , செங்குணம் வார்டு உறுப்பினர்கள் நல்லம்மாள், அனிதா, ராஜகண்ணு , நிர்மலா அஞ்சலை, அருமடல் வார்டு உறுப்பினர்கள் சுசிலா, சுப்ரமணி , பாலாம்பாடி வார்டு உறுப்பினர் திருமூர்த்தி, பணிதள பொறுப்பாளர்கள் அம்மு,சிநேகா , பூவழகி, சாரதாதேவி மற்றும் குமார் அய்யாவு உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.