பெரம்பலூர் கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தலைவர் பொன்குமார் ஆய்வு

பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் அதன் தலைவர் பொன்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-29 12:56 GMT

பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வாரிய தலைவர் பொன்குமார் பேசினார். 

பெரம்பலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அந்த வாரியத்தின் தலைவர் பொன்குமார் பின்னர் நடைபெற்ற விழாவில் நல வாரியத்தில் உள்ள பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்‌‌.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

வாரியத்தில் பதிவு செய்த பெண்தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் என்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.மேலும் பேறுகால நிதி 6 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொன்குமார்,கட்டுமான தொழிலாளர்கள் வீடுகட்டுவதற்கு நான்கரை லட்சரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்றும் இந்த திட்டங்கள் எல்லாம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

சிமெண்ட் ஆலை அதிபர்கள் அண்மைக்காலமாக உற்பத்தியை குறைத்து தேவையை அதிகப்படுத்தி லாபத்தை பெருக்குகிற நோக்கத்தோடு கூட்டணிவைத்து கூட்டுகொள்ளை அடிப்பதாக குற்றம்சாட்டிய பொன்குமார் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News