பெரம்பலூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

பெரம்பலூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்திற்குள் புகுந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

Update: 2021-12-08 10:59 GMT

பெரம்பலூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே அரசு கேபிள் டிவி அலுவலகம் இயங்கி வருகிறது.காலையில் வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்று பணிபுரிந்த ஊழியர்கள் உள்ளே பாம்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தஞ்சமடைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.பிடிபட்ட பாம்பு, சாரைப்பாம்பு வகையை சேர்ந்தது என்றும் 8 அடி நீளமுள்ளது என்றும் தெரியவந்தது.

பிடிபட்ட பாம்பை தீயணைப்பு துறையினர் வனப்பகுதிக்குள் விடுவதற்காக பைப்பில் வைத்து எடுத்து சென்றனர்.இதனால் அரசுகேபிள் டிவி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News