பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-10-22 11:44 GMT

பெரம்பலூர் நகர் பகுதியான வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகரில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது  மனைவி பத்மாவதி. இவர்கள் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும்  21 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகை திருட்டு  போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News