பாபர் மசூதி இடிப்பு கண்டித்து பெரம்பலூரில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு கண்டித்து பெரம்பலூரில் த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2021-12-06 15:24 GMT

பாபர் மசூதி இடிப்பு கண்டித்து பெரம்பலூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் பாபர் மசூதி இடிப்பு குறித்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்  மீராமொய்தீன் வரவேற்று பேசினார். மாவட்ட, அணி, ஒன்றிய கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், மேலும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம். பிரபாகரன், தி. மு. க மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சி.பி.எம். மாவட்ட தலைவர் செல்லதுரை, சி.பி.ஐ.மாவட்ட செயலாளர் வீ. ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ப.காமராசு, வி. சி. க வின் மாவட்ட செய்தி தொடர்பாளர் இரா. ஸ்டாலின், திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

மேலும் இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் காஞ்சி சலீம்கான் , த. மு. மு. க வின் மாவட்ட உலமா அணி செயலாளர் அபுபக்கர் பாக்கவி சிறப்புரையாற்றினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் நிர்வாகிகள் பலர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News